{ Posts RSS } { Comments RSS }

>

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக ஸ்ரீ வில்வ உலகம் .

யோகாசனம்

யோகாசனம்
நம்முடைய வாழ்க்கை முறையை சீர்படுத்தினாலே நோய்கள் நம்மை அண்டாமல் செய்துவிட முடியும். அத்தகையை நல்ல வாழ்க்கை முறையில் யோகா ஓர் அங்கமாகவே இருத்தல் வேண்டும். இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு. பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்

நலமாய் வாழ நல்லதோர் மார்க்கம்

நலமாய் வாழ நல்லதோர் மார்க்கம்




ஓம்                                       சிவயநம

சிவசித்தர் அருள்









நலமாய் வாழ நல்லதோர் மார்க்கம் சொன்னேன் கேளப்பா என்றாரே. சிவன் அருளால் சிவசித்தா வாக்கு தந்தாரே! வாசியை உணர்ந்தால் வாழ்நாள் உயருமே! உம்மை நம்பு! இறையை நம்பு! எம்மை நம்பு! யாம் சொல்லும் நெறிகளை பின் தொடர வாழ்வு வளமாகுமே!

    அடியேன் என்னை ஆட்கொண்ட ஐயனே! அப்பனே! அம்பலத்தரசே! எம்முள் இருக்கும் உம்மை அறிய ஆவல் கொண்டேனே! உம் முதல் திரிசனம் தினமும் கண்டு களிக்கிறேன். உம்மை எம் குரு வடிவில் பார்த்து கொண்டு பேரானந்தம் அடைகிறேன். மேலும் உம்மை எம்முள் காண முயற்சி செய்தேன். எம் மெய் குரு வழிகாட்டுதலில் நாடி சுத்தியின் மூலம் நாடினேன். ஆனால் எம்மை மாயப்பேய் நாடியது. அதன் பிடியில் இருந்து மீண்டு வந்தேன் ஐயனே! இனி மாயப்பேயை நமசிவய எனும் ஐந்து எழுத்து மந்திரத்தால் விரட்டி வெட்டுவேனே!


    ஒட்டு மொத்த மனித இனமே உன்னை வியந்து பார்க்கிறது.

    பிறந்த உடன் தாய் தந்தையை பிரிந்து தனிமையில் வளர்ந்து தவத்தில் இருந்து தம்மை உணர்ந்து, சாதுக்களின் ஆசிப்பெற்று அறிவை அறிய பண்பும், கலையும், ஞானமும் பெற்று அவரிடம் சிவ சித்தன் என்ற பெயரும் பெற்று வையகத்தில் மாந்தருக்கு பிறப்பில்லா வரம் வாங்க வாசியை உணர வைக்க உன்னத நோக்கம் கொண்டு மருந்தில்லா மாந்தர்கள், பிணியில்லா பிள்ளைகள் என்று பூ உலகில் அனைவரும் இன்பமாய் வாழ வழி செய்யும் ஐயனே! உம் பாதம் பணிந்தேன்!

மாய பிறப்பற்கும் ஐயா போற்றி!
ஆயனாய் பிறந்த என்னை அடியேன் என்று சொல்ல வைத்தாய் போற்றி!

தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் நின்றருள் தந்தாய் போற்றி!

மலைகளுக்கு நடுவே மகாலிங்கமாய் அமர்ந்தாய் போற்றி!
மதுரையம்பதியில் ஆட்சி செய்தாய் போற்றி!

சித்து எனும் பித்து பிடித்து திரியும் அடியாரை சிவத்தை அறிய வைப்பாய் போற்றி!

அடியார்க்கு அழகு செய்தாய் போற்றி!

தவமுனிகளுக்கு தவசிலிங்கமாய் காட்சி தந்தாய் போற்றி!

சித்தர்கள் சிந்தையில் நின்றாய் போற்றி!

வாசியின் மூலம் பெருவாழ்வு தந்தாய் போற்றி!




ஸ்ரீ வில்வம் யோகா குடும்பத்தின் ஆண் பிள்ளைகள் அய்யனை காண சதுரகிரி பயணம்!!

ஸ்ரீ வில்வம் யோகா குடும்பத்தின் ஆண் பிள்ளைகள் அய்யனை காண சதுரகிரி பயணம்!!








சிகரம் ஏறினோம் சிறந்த மனிதருடன் சிவனைக் காண!
சிவதரிசனம் கண்டோம்! சித்தியும் பெற்றோம்!

சிவ சித்தர் அருளால் வான் உயாந்த மலையும் தம்மை தாழ்த்தி கொண்டு வழிதந்தது சிவசித்தரின் சீடர்களுக்கு!

முதுமைக்கு வலிமை தந்து வா என்று அழைத்து வந்து வான் உயர இருந்த மலையில் ஏறவைத்து சுந்தரமூர்த்தி, சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் தரிசனமும் பெற செய்து மனநிறைவுடனும் அவர்தம் இல்லத்துக்கு வழி அனுப்பிய குருவே!

தம் சீடர்களுக்கு மட்டுமல்ல! அடியார்களுக்கு யோக முறையில் சிகிச்சை செய்து வலியை போக்கியவரே!

எமக்கு தாங்கள் குருவாக கிடைத்ததற்கு யான் என்ன தவம் செய்தேன்!
எம் சிரத்தை உம் பாதம் வைத்து வணங்குகிறேன் குருவே!



அடியேன்S.வீரமனிகண்ணன்


ஸ்ரீ வில்வம் யோக சதுரகிரி யாத்திரைஒரு பயணப்பதிவு2

ஸ்ரீ வில்வம்  யோக சதுரகிரி யாத்திரைஒரு பயணப்பதிவு 2






ஸ்ரீ வில்வம் யோகப் பயிற்சியின் மூலம் யோக சித்தி பெறுபவர்கள்

ஸ்ரீ வில்வம்  யோக சதுரகிரி யாத்திரைஒரு பயணப்பதிவு 1
 
 












ஸ்ரீ வில்வம் யோகப் பயிற்சியின் மூலம் யோக சித்தி பெறுபவர்கள்

யோகா செய்தவர்கள் பற்றி விவரம்

ஸ்ரீ வில்வம்

அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது ...என்றும் அன்புடன்...சிவசித்தன்
நா.கோபி கண்ணன் ....











யோகா செய்தவர்கள்

ஸ்ரீ வில்வம் - சிவசித்தன்
யோகப் பயிற்சியின் மூலம் யோக சித்தி பெறுபவர்கள் யோகப் பயிற்சி கஷ்டம் என்று விட்டு விலகாமல், பிறவாமை வேண்டும், மரணத்தை வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தைக் கடைப் பிடித்தால் இப்பயிற்சி எளிதாக சித்தியாகும் என்பதில் ஐயமில்லை.






















அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது


 

Copyright (c) 2010 ஸ்ரீ வில்வ உலகம். Design by Vilvam Themes
Blogger Template by S Veeramanikannan.