{ Posts RSS } { Comments RSS }

>

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக ஸ்ரீ வில்வ உலகம் .

யோகாசனம்

யோகாசனம்
நம்முடைய வாழ்க்கை முறையை சீர்படுத்தினாலே நோய்கள் நம்மை அண்டாமல் செய்துவிட முடியும். அத்தகையை நல்ல வாழ்க்கை முறையில் யோகா ஓர் அங்கமாகவே இருத்தல் வேண்டும். இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு. பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்

நலமாய் வாழ நல்லதோர் மார்க்கம்

நலமாய் வாழ நல்லதோர் மார்க்கம்




ஓம்                                       சிவயநம

சிவசித்தர் அருள்









நலமாய் வாழ நல்லதோர் மார்க்கம் சொன்னேன் கேளப்பா என்றாரே. சிவன் அருளால் சிவசித்தா வாக்கு தந்தாரே! வாசியை உணர்ந்தால் வாழ்நாள் உயருமே! உம்மை நம்பு! இறையை நம்பு! எம்மை நம்பு! யாம் சொல்லும் நெறிகளை பின் தொடர வாழ்வு வளமாகுமே!

    அடியேன் என்னை ஆட்கொண்ட ஐயனே! அப்பனே! அம்பலத்தரசே! எம்முள் இருக்கும் உம்மை அறிய ஆவல் கொண்டேனே! உம் முதல் திரிசனம் தினமும் கண்டு களிக்கிறேன். உம்மை எம் குரு வடிவில் பார்த்து கொண்டு பேரானந்தம் அடைகிறேன். மேலும் உம்மை எம்முள் காண முயற்சி செய்தேன். எம் மெய் குரு வழிகாட்டுதலில் நாடி சுத்தியின் மூலம் நாடினேன். ஆனால் எம்மை மாயப்பேய் நாடியது. அதன் பிடியில் இருந்து மீண்டு வந்தேன் ஐயனே! இனி மாயப்பேயை நமசிவய எனும் ஐந்து எழுத்து மந்திரத்தால் விரட்டி வெட்டுவேனே!


    ஒட்டு மொத்த மனித இனமே உன்னை வியந்து பார்க்கிறது.

    பிறந்த உடன் தாய் தந்தையை பிரிந்து தனிமையில் வளர்ந்து தவத்தில் இருந்து தம்மை உணர்ந்து, சாதுக்களின் ஆசிப்பெற்று அறிவை அறிய பண்பும், கலையும், ஞானமும் பெற்று அவரிடம் சிவ சித்தன் என்ற பெயரும் பெற்று வையகத்தில் மாந்தருக்கு பிறப்பில்லா வரம் வாங்க வாசியை உணர வைக்க உன்னத நோக்கம் கொண்டு மருந்தில்லா மாந்தர்கள், பிணியில்லா பிள்ளைகள் என்று பூ உலகில் அனைவரும் இன்பமாய் வாழ வழி செய்யும் ஐயனே! உம் பாதம் பணிந்தேன்!

மாய பிறப்பற்கும் ஐயா போற்றி!
ஆயனாய் பிறந்த என்னை அடியேன் என்று சொல்ல வைத்தாய் போற்றி!

தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் நின்றருள் தந்தாய் போற்றி!

மலைகளுக்கு நடுவே மகாலிங்கமாய் அமர்ந்தாய் போற்றி!
மதுரையம்பதியில் ஆட்சி செய்தாய் போற்றி!

சித்து எனும் பித்து பிடித்து திரியும் அடியாரை சிவத்தை அறிய வைப்பாய் போற்றி!

அடியார்க்கு அழகு செய்தாய் போற்றி!

தவமுனிகளுக்கு தவசிலிங்கமாய் காட்சி தந்தாய் போற்றி!

சித்தர்கள் சிந்தையில் நின்றாய் போற்றி!

வாசியின் மூலம் பெருவாழ்வு தந்தாய் போற்றி!




0 comments:

Post a Comment

 

Copyright (c) 2010 ஸ்ரீ வில்வ உலகம். Design by Vilvam Themes
Blogger Template by S Veeramanikannan.